Main Menu

தொடருந்திலிருந்து தவறி விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் பலி

பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கிப் பயணித்த பொடிமெனிக்கே தொடருந்திலிருந்து தவறி விழுந்து வெளிநாட்டு பெண்ணொருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
பதுளை தொடருந்து நிலையத்திலிருந்து சுமார் ஒரு கிலோமீற்றர் தொலைவில் இன்று காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த பெண் படம் எடுப்பதற்கு முற்பட்ட நிலையில் தவறி விழுந்து உயிரிழந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த நிலையில் சடலம் பதுளை போதனா வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.
பகிரவும்...
0Shares