Main Menu

தேர்தல் பிரச்சாரம் ஓய்ந்தது: புதுச்சேரி, கேரளா, அசாமில் நாளை வாக்குப்பதிவு

புதுச்​சேரி, கேரளா, அசாம் ஆகிய 3 மாநிலங்​களில் ஒரே கட்​ட​மாகச் சட்​டப்​பேர​வைத் தேர்​தல் நடை​பெறுகிறது. இதற்​கான பிரச்​சா​ரம் நேற்று மாலை​யுடன் முடிந்​தது. இந்த 3 மாநிலங்​களி​லும் நாளை வாக்​குப் பதிவு நடை​பெறு கிறது.

தவெக கூட்​டணி 30 தொகு​தி​களி​லும் போட்​டி​யிடு​கிறது. நாம் தமிழர் கட்சி 28 தொகு​தி​களில் தனித்​துப் போட்​டி​யிடு​கிறது. மாஹே, ஏனாம் தொகு​தி​களில் போட்​டியைத் தவிர்த்​துள்​ளது. இதைத் தாண்டி பிர​தான கட்​சிகளில் சீட் கிடைக்​காத முக்​கிய பிர​முகர்​கள் சிலரும் பல்​வேறு தொகு​தி​களில் சுயேச்​சை​யாக களமிறங்​கி​யுள்​ளனர். புதுச்​சேரி தேர்​தல்​ களத்​தில்​ மொத்​தம்​ 117 சுயேச்​சைகள்​ உட்​பட 294 வேட்​பாளர்​கள்​ உள்​ளனர்.

ஐக்​கிய ஜனநாயக முன்​னணி​யில் காங்​கிரஸ் 95, இந்​திய யூனியன் முஸ்​லிம் லீக் 27 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. இதர தொகு​தி​கள் கூட்​டணி கட்​சிகளுக்கு வழங்​கப்​பட்டு உள்​ளன. தேசிய ஜனநாயக கூட்​ட​ணி​யில் பாஜக 115 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. இதர தொகு​தி​கள் அதன் கூட்​டணி கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்டு இருக்​கிறது.

அசாம்: அசாமில் ஆளும் பாஜக – காங்​கிரஸ் இடையே நேரடி போட்டி நில​வு​கிறது. அந்த மாநிலத்​தில் 126 தொகு​தி​கள் உள்​ளன. ஆளும் தேசிய ஜனநாயக் கூட்​ட​ணி​யில் பாஜக 89 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது. அதன் கூட்​டணி கட்​சி​யான அசாம் கண பரிஷத் 26, போடோலேண்ட் மக்​கள் முன்​னணி 11 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன.காங்​கிரஸ் தலை​மையி​லான அசாம் சோன்​மிலிட்டோ மோர்ச்சோ கூட்​ட​ணி​யில் காங்​கிரஸ் 95 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கிறது.

அதன் கூட்​டணி கட்​சி​யான ராய்​ஜோர் தல் 16, அசாம் ஜாதிய பரிஷத் 10 தொகு​தி​களில் போட்​டி​யிடு​கின்​றன. மீத​முள்ள தொகு​தி​கள் கம்​யூனிஸ்ட் கட்​சிகளுக்கு ஒதுக்​கப்​பட்டு உள்​ளன. பாஜக, காங்​கிரஸ் கூட்​ட​ணியை தவிர்த்து திரிண​மூல் 23, ஜார்க்​கண்ட் முக்தி மோர்ச்சா 21, ஆம் ஆத்மி 14 தொகு​தி​களில் வேட்​பாளர்​களை நிறுத்தி உள்ளன.