தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள்; யாழ். மாவட்ட சர்வமத பேரவையின் மாநாடு

தேசிய ஒற்றுமையை நோக்கி எம்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள் என்ற கருப்பொருளில் யாழ்ப்பாண மாவட்ட சர்வமத பேரவையின் மாநாடு யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் நடைபெறவுள்ளது என யாழ் மாவட்ட சர்வமத பேரவையினர் அறிவித்தார்கள்.
யாழ் மாவட்ட சர்வமத பேரவையின் ஊடகவியலாளர் சந்திப்பு புதன்கிழமை (3) யாழ் ஆயர் இல்லத்தில் அதன் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் நான்கு பிரதான சமயங்களான இந்து சமயத்திலிருந்து பேரவையின் தலைவர் சிவஸ்ரீ கிருபானந்த குருக்கள் கத்தோலிக்க சமயத்திலிருந்து யாழ் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்பணி ஜெபரட்ணம் ,முஸ்லிம் சமயத்திலிருந்து அகில இலங்கை ஜம்மித்துள் உலமா சமை யாழ் கிளிநொச்சி மாவட்ட செயலாளர்.மௌலவி ஏம்.றழிம் (மக்கி),பொளத்த சமயத்திலிருந்து யாழ் நாகவிகாரை விகராதிபதி விமலரத்தினதேரர் கலந்து கொண்டார்கள்.
மாநாடு தொடர்பில் யாழ் மறைமாவட்ட குருமுதல்வர் கருத்து தெரிவிக்கையில்;
யாழ் மாவட்ட சர்வமத பேரவையினால் யாழ் மாவட்ட சர்வமத பேரவை மாநாடு ஒக்டோபர் மாதம் நடாத்தப்படவுள்ளது இந்த மாநாடு தேசிய ஒற்றுமையை நோக்கி எல்மை வழிநடத்தும் சமய விழுமியங்கள் என்ற கருப்பொருளில் இந்த மாநாடு நடைபெறவுள்ளது இந்த மாநாடு ஒக்டோபர் மாதம் நான்காம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாச்சார மண்டபத்தில் காலை 9.00 மணிமுதல் நண்பகல் 12 மணிவரை சர்வமத மாநாடு நடைபெறவுள்ளது.
இதற்கான ஏற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுவருகின்றோம் இந் கருப்பொருளின் நோக்கத்திற்கேற்ப எங்களுடைய நாட்டில் ஒற்றுமையை உருவாக்குவதற்கு எமது நாட்டில் உள்ள பிரதான நான்கு சமயங்களும் தங்களுடைய பங்களிப்பைச் செய்ய வேண்டும்.
குறிப்பாக நான்கு சமயங்களிலும் இருக்கின்ற சமய விழுமியங்களை எல்லா மக்களும் பின்பற்றிவாழ்ந்து உண்மையான ஒற்றுமையான நாட்டை மக்களை உருவாக்குவதற்கு நாங்கள் எவ்வாறு பங்களிப்பைச் செய்யலாம் என்பதுதான் இந்த நாட்டின் முக்கியமான நோக்கமாக இருக்கிறது.
குறிப்பாக எமது நாட்டின் வரலாற்றை பின்நோக்கி பார்க்கின்றபோது எத்தனையோ வேதனைகள், கவலைகள், பகைமைகள், இழப்புகள் , பழிவாங்கல்கள் என்று எத்தனையோ காயங்களோடு எங்களுடைய நாட்டின் வரலாறுகள் கடந்து கொண்டிருக்கின்றது.
என்றால் இந்த நாட்டிலுள்ள சமய விழுமியங்கள் கடைப்பிடிக்கமுடியாமல் போனமைதான் எல்லா சமயங்களும் இந்த அன்பை,இரக் கத்தை , ஒற்றுமையைத்தான் வலியுறுத்தி நிற்கின்றது. எனவேதான் இந்த சமய விழுமியங்களை எல்லா இனமத சமய மக்களாலும் வாழப் படுகின்றபோதுதான் நிறைவான ஒற்றுமையை நாங்கள் எல்லோரும் அனுபவிக்கமுடியும்.
இதற்காக யாழ்மாவட்ட சர்வமத பேரவை என்ன செய்யலாம் என்று சிந்தித்ததன் விளைவாகத்தான் யாழ் மாவட்ட சர்வமத பேரவை மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.
பகிரவும்...