Main Menu

தேசபந்து தென்னக்கோனின் மனைவி, மகனிடமிருந்து வாக்குமூலம் பதிவு

பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின் மனைவி மற்றும் மகனிடம் இருந்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

2023 ஆம் ஆண்டு மாத்தறை, வெலிகம பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை கைதுசெய்து நீதிமன்றில் ஆஜர்படுத்துமாறு மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த பெப்ரவரி மாதம் 28 ஆம் திகதி பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

ஆனால் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றில் ஆஜராகாமல் தலைமறைவாக இருப்பதால் அவருக்கு எதிராக மாத்தறை நீதவான் நீதிமன்றினால் கடந்த செவ்வாய்க்கிழமை (11) பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

இதனால் தேசபந்து தென்னக்கோனை கைது செய்ய பொலிஸ் அதிகாரிகள் குழுக்களாக இணைந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோனின்  மனைவி மற்றும் மகனிடமிருந்து கடந்த வியாழக்கிழமை (13) வாக்குமூலம் பதிவு செய்துள்ளனர்.

பகிரவும்...
0Shares