Main Menu

தேசபந்துவுக்கு உதவிய இருவர் கைது

பணி இடைநீக்கம் செய்யப்பட்ட பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் தலைமறைவாக இருப்பதற்கு உதவிய குற்றச்சாட்டில் பொலிஸ் கான்ஸ்டபிள் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

விசேட பாதுகாப்பு பிரிவில் பணியாற்றிவரும் கான்ஸ்டபிள் மற்றும் தலவத்துகொட பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டதாக தெரியவருகிறது.

கடந்த பெப்ரவரி 17 முதல் மார்ச் மாதம் 19 வரையான காலப்பகுதியில் தேசபந்து தென்னகோன் நீதிமன்றில் முன்னிலையாகாமல் தலைமறைவாக இருப்பதற்காக குறித்த இருவரும் உதவியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பகிரவும்...