Main Menu

‘தெற்காசியாவிற்-கான சிறந்த விமான நிறுவனம்’ விருதை வென்றது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்

இந்தியாவின் டெல்லி நகரத்தில் நடைபெற்ற சர்வதேச சுற்றுலா மாநாட்டில் ‘தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்’ என்ற விருதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றுள்ளது.

இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளையும் தனித்துவத்தையும் எடுத்துகாட்டுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்துக்கும் தெற்காசிய நாடுகளுக்கம் இடையிலான உறவை இந்த விருது எடுத்துகாட்டுகிறது.

ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் வர்த்தக தலைவரான திமுத்து தென்னகோன் இது தொடர்பில் தெரிவிக்கையில், 

‘தெற்காசியாவிற்கான சிறந்த விமான நிறுவனம்’ என்ற விருதை ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனம் வென்றது பெருமைக்குரிய விடயமாகும்.

இந்த விருது தெற்காசிய நாடுகளுக்கும் இலங்கைக்கும் இடையிலான நட்புறவை எடுத்துகாட்டுகிறது.

இது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பான சேவைகளை உறுதிப்படுத்துகிறது.

இந்த விருது ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் சேவைகளை உலகம் முழுவதும் கொண்டு செல்ல எங்களைத் தூண்டுகிறது.

எதிர்காலத்தில் எமது வாடிக்கையாளர்களுக்கு பல சிறப்பான சேவைகளை வழங்குவதற்கு நாம் எதிர்ப்பார்க்கின்றோம் என்றார்.

பகிரவும்...
0Shares