Main Menu

திருமண பந்தத்தில் இணைந்தார் ஜீவன் தொண்டமான்

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான ஜீவன் தொண்டமானின் திருமணம் இன்று (23) இந்தியாவில் திருப்பத்தூரில் நடைபெற்று வருகின்றது.
தமிழ்நாட்டின் திருப்பத்தூரை சேர்ந்த சீதா ஸ்ரீ நாச்சியார் என்பவரை ஜீவன் தொண்டமான் மணந்தார்.
குறித்த திருமண நிகழ்வில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மற்றும் அவரது பாரியார் பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்க ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அத்துடன் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், மற்றும் இலங்கையின் பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளனர்.
மேலும், தேசிய முற்போக்கு கழகத்தின் கழகப் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், திராவிட முன்னேற்றக் கழகத்தின் நாடாளுமன்ற உறுப்பினர் மு.க.கனிமொழி உள்ளிட்ட அரசியல், வர்த்தக மற்றும் சினிமாத் துறைகளைச் சேர்ந்த பல முக்கியப் பிரமுகர்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டுள்ளனர்.
பகிரவும்...