Main Menu

தியாகதீபம் திலீபன் அவர்களின் 38ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று

தியாகதீபம் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நாள் இன்று; வீர வணக்கம் செலுத்துவோம்!

தாயகத்தின் விடுதலைக்காக ஈழ மண்ணில் வீரஞ்செறிந்த போராட்டம் நடைபெற்ற நேரத்தில் , மகாத்மா காந்தி காட்டிய வழியில் திலீபன் உண்ணா நோன்பு அறப்போராட்டத்தை 1987 ஆம் ஆண்டு செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கினார்.

ஒரு சொட்டு நீர் கூட பருகாமல் 12 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து செப்டம்பர் 26 ஆம் நாள் உயிர் தியாகம் செய்தார்.

5 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, செப்டம்பர் 15, 1987 அன்று, யாழ்ப்பாணத்தின் நல்லூர் வீதியில் முருகன் கோயில் அருகில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் சூழ்ந்திருக்க உண்ணா நோன்பு போராட்டத்தை முன்னெடுத்தார்.
*பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு, தடுப்புக்காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.
* புணர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடத்தப்படும் சிங்களக் குடியேற்றங்கள், உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
* இடைக்கால அரசு நிறுவப்படும் வரை புணர்வாழ்வு என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.
வடகிழக்கு மாகாணங்களில், காவல் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.
* இந்திய அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்களில் குடிகொண்டுள்ள ராணுவ, காவல் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

“எனக்கு என்ன நேர்ந்தாலும், சுய நினைவு இருந்தாலும், இல்லாவிட்டாலும் யாரும் எனக்கு உணவோ, சிகிச்சையோ அளிக்கக் கூடாது”

என்று திலீபன் அறிவித்து மன உறுதி குலையாமல் பட்டினிப் போராட்டத்தின் மூலம் ஈழ மக்களின் விடுதலை உணர்ச்சியை தட்டி எழுப்பினார்.

38 ஆண்டுகள் கடந்த பின்னரும் திலீபன் முன்வைத்த கோரிக்கைகள் நனவாகவில்லை. தற்போதைய அரசின் நிலைப்பாடு சற்று மக்கள் மனதில் நம்பிக்கையூட்டினாலும் முழுமையான வளமான வாழ்வு தமிழ் மக்களுக்கு கிடைக்க தியாகதீபத்தின் ஆன்மா துணை நிற்கும்.

தியாகச்சுடர் திலீபனின் 38 ஆம் ஆண்டு நினைவு நாளில் புகழ் வணக்கம் செலுத்துவோம்!
ஈழத் தமிழர்களின் வாழ்வில் விடியல் ஏற்பட என்றும் துணை நிற்போம்!

பகிரவும்...
0Shares