திட்டமிட்ட குற்றச் செயல்களில் ஈடுபடும் குழுவைச் சேர்ந்த ”பஸ் லலித்” டுபாயில் கைது

‘பஸ் லலித்’ என்று அழைக்கப்படும் பிரபல பாதாள உலகக் குழு உறுப்பினரான லலித் கன்னங்கர டுபாயில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இலங்கையில் பல ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இவர் சர்வதேச சட்ட அமலாக்க நிறுவனங்களுடன் இணைந்து நடத்திய கூட்டு நடவடிக்கையைத் தொடர்ந்து கைது செய்யப்பட்டுள்ளார்.
கப்பம் பெறுதல், துப்பாக்கிச் சூடு உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அவர் இலங்கையில் தேடப்பட்டு வருகிறார்.
பகிரவும்...