தாஜூதீனின் மரணத்துடன் தனது தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை – அம்மாவே இதற்கு காரணம் – கஜ்ஜாவின் மகன் தகவல்

படுகொலை செய்யப்பட்ட தாஜூதீனின் மரணத்துடன் தனது தந்தைக்கு எந்த தொடர்பும் இல்லை எனவும் தனது தாயார் பொய்யான தகவலை வழங்கியுள்ளதாகவும் கஜ்ஜா என்ற அனுர விதானகமகேவின் மகன் ஊடகங்களிடம் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது” தாஜூதீன் கொலை சம்பவத்தில் என் தந்தையான கஜ்ஜாவிற்கு தொடர்பில்லை
எனது அம்மா மற்றும் அவரது கள்ளத்தொடர்பு கணவரால் எனது அப்பா கொலை செய்யப்பட்டார். எனது தந்தை, சகோதரர் மற்றும் சகோதரியின் கொலையில் எனது தாயும் அவரது கள்ளக் காதலரும் ஈடுபட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்ட அனுர விதான கமகே எனப்படும் கஜ்ஜா, தாஜுதீனின் கொலையுடன் தொடர்புடையவர் என்ற தவறான தகவலை பொலிசார் வெளியிட்டுள்ளனர். பொலிசாரின் கூற்றுப்படி, வாசிம் தாஜுடின் மோட்டார் வாகனத்தின் பின்னால் சென்ற
மோட்டார் வாகனத்தில் ஏறிய நபர் மித்தேனிய கஜ்ஜா அல்லது அருண பிரியந்த என அவரது முன்னாள் மனைவி உறுதிப்படுத்தியதாக தெரிவிக்கப்பட்டது.
பொலிசாரின் கூற்றுப்படி, அவரது உடல் பண்புகளின் அடிப்படையில் சிசிடிவி காட்சிகளில் உள்ள நபர் கஜ்ஜா,தான் என்பதை அவரது முன்னாள் மனைவி உறுதிப்படுத்தியுள்ளார். அருண பிரியந்த அல்லது மித்தேனிய கஜ்ஜாவின் சகோதரர்களிடம் இந்த சிசிடிவி காட்சிகளை ஏன் பொலிசார் காட்டவில்லை. அவர்களின் சகோதரரும் காட்சிகளில் இருக்கிறாரா என்று ஏன் கேட்கவில்லை?
தனது குழந்தைகளையும் கணவரையும் விட்டுவிட்டு வேறு ஒருவருடன் சென்ற பெண்ணிடம் மட்டும் பொலிஸார் ஏன் வாக்குமூலம் பெறுகிறார்கள்? எனது அப்பா 2012ஆம் ஆண்டு ரூட் எண் 120 இல் ஹொரணை – கொழும்பு சாலையில் பணிபுரிந்தார், மேலும், அங்க லட்சங்களிலேயே அருண பிரியந்த சிசிடிவி காட்சிகளில் அடையாளம் காணப்பட்டுள்ளார். மேலும் அவர்தான் சிசிரிவியில் இருப்பதாக நினைப்பது அபத்தமானது.
எனது அப்பாவையும் குழந்தைகளையும் விட்டு தனது கள்ளக்காதலரான சம்பத் ராமநாயக்கவுடன் சென்ற, அவரது மனைவியும்
இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்ட பகோ சமனின் உறுப்பினர்களாவர். மேலும், அருண பிரியந்த மூன்று குழந்தைகளையும் விட்டுவிட்டு, குற்றத்தைச் செய்ய எனது அம்மா காதலருடன் துபாய் சென்றார். சந்தேக நபர் பகோ சமனுடன் இருந்ததற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன.
எனவே, எனது தந்தையின் கொலையிலும், எனது சகோதரன் மற்றும் சகோதரியின் கொலையிலும் எனது தாயார் அமீஷா பெத்மியும்,
அவரது காதலர் சம்பத் ராமநாயக்கவும் ஈடுபட்டதற்கான தெளிவான ஆதாரங்கள் உள்ளன” இவ்வாறு தெரிவித்துள்ளார் .