Main Menu

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய சுவீடனைச் சேர்ந்த 4 நிறுவனங்கள் விருப்பம்- தூதர் தகவல்

தமிழக அரசு, வரும் 2030க்குள் தமிழகத்தை ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர் (ரூ.84 லட்சம் கோடி) பொருளாதார மாநிலமாக மாற்ற இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக, பல்வேறு நிறுவனங்களின் தொழில் முதலீட்டை ஈர்க்கும் நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

அதன்படி, தமிழகத்தில் முதலீடு செய்ய வருமாறு, சுவீடன் நாட்டு நிறுவனங்களுடன், தொழில் துறை அமைச்சர் ராஜா, வழிகாட்டி நிறுவன மேலாண் இயக்குனர் விஷ்ணு ஆகியோர், சென்னையில் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

இந்த பேச்சுவார்த்தையில் இந்தியாவுக்கான சுவீடன் நாட்டு துாதர் ஜேன் தெஸ்லெப் மற்றும் ஸ்வீடனை சேர்ந்த 14 நிறுவனங்கள் பங்கேற்றன.

இந்த நிலையில் ஐகியா உள்பட 4 நிறுவனங்கள் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுவதாக சுவீடன் நாட்டு தூதர் ஜான் திஸ்லெஃப் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே 70 சுவீடன் நிறுவனங்கள் உள்ளன. அவற்றில் 25,000 பேர் பணிபுரிகின்றனர்.

டிரெல்போர்க் மெரைன் சர்வீசஸ், சாப், கேம்ஃபில் மற்றும் ஐகியா நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க விருப்பம் தெரிவித்துள்ளன.

அதே சமயம், தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் சுவீடன் நிறுவனங்கள் சில தங்களது தொழிற்சாலைகளை விரிவாக்கம் செய்யவும் திட்டமிட்டுள்ளன.

பகிரவும்...
0Shares