Main Menu

தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் – கோவிந்தன் கருணாகரம்

தமிழ்த் தலைமைகள் ஓரணியில் பயணித்திருந்தால் வடக்கு மற்றும் கிழக்கு தமிழர்களுக்கான தீர்வு குறித்து இந்தியா ஒரு பலமான அழுத்தத்தைக் கொடுத்திருக்கும் என டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான கோவிந்தன் கருணாகரம் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எனவே தமிழ் மக்களின் எதிர்காலத்தைக் கருத்திற் கொண்டு தமிழ்த் தேசிய பரப்பில் இயங்கும் கட்சிகள் ஒற்றுமையாக செயற்பட வேண்டும் எனவும் டெலோ எனப்படும் தமிழீழ விடுதலை இயக்கத்தின் செயலாளர் கோவிந்தன் கருணாகரம் வலியுறுத்தியுள்ளார்.
பகிரவும்...
0Shares