தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51ஆவது ஆண்டு நினைவேந்தல்!
யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற நான்காவது உலகத் தமிழராய்ச்சி மாநாட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 51 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை 9:30 மணிக்கு யாழ்ப்பாணம் முற்றவெளியில் அமைந்துள்ள உலகத் தமிழராட்சி மாநாட்டு படுகொலை நினைவாலயத்தில் இடம்பெற்றது
இதன் போது உயிரிழந்த ஒன்பது உறவுகளையும் நினைவு கூறி அமைக்கப்பட்ட நினைவுத்தூபியின் முன் பொதுச்சுடர் ஏற்றப்பட்டதோடு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டு அக வணக்கமும் செலுத்தப்பட்டது.
பகிரவும்...