Main Menu

தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளராக சுமந்திரன் தெரிவு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய பதில் பொதுச் செயலாளராக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் இன்று நடைபெற்ற கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.
இதற்கு முதல் அந்த பதவியிலிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் சுகவீனம் காரணமாகப் பதவியில் தான் தொடர்ந்து இருக்க முடியாது என இன்றைய கூட்டத்தில் தெரிவித்ததையடுத்து இந்த பதவிக்கு சுமந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.