Main Menu

தமிழகத்தில் உணவு விஷமானதால் 43 மாணவர்கள் வைத்திய சாலையில்

தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் அமைந்துள்ள ஒரு அரசுப் பாடசாலை ஒன்றில் 43 மாணவர்கள் உணவு விஷம் அடைந்தைத் தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட ஒரு பெரிய சம்பவம் நேற்று (10) நிகழ்ந்துள்ளது.

செவ்வாய்க்கிழமை அரசுப் பாடசாலையில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்கப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த சம்பவம் நிகழ்ந்தது.

உணவை உட்கொண்ட சிறிது நேரத்திலேயே, சில மாணவர்கள் வாந்தி எடுக்கத் தொடங்கினர் மற்றும் வயிற்றில் வலி இருப்பதாக முறைப்பாடு அளித்தனர்.

இதேபோன்ற அறிகுறிகள் இருப்பதாக அதிகமான மாணவர்கள் முறைப்பாடு அளித்ததால், அவர்கள் சிகிச்சைக்காக அரசு வைத்தியாசலைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

தமிழக அரசுப் பாடசாலை மாணவர்கள் மதிய உணவை சாப்பிட்ட பின்னர் நோய்வாய்ப்படுவது இது முதல் முறை அல்ல.

இந்த ஆண்டு ஜனவரி மாத தொடக்கத்தில் உணவு விஷம் அடைந்ததாக சந்தேகிக்கப்படும் 33 மாணவர்கள் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.