தனியார் பேருந்து உரிமையாளர்கள் பணிப் பகிஷ்கரிப்பு

கிழக்கு மாகாணத்தில் செயல்பட்டு வரும் தென் கிழக்கு கரையோர பகுதி தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று (07) திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் பேருந்துகளுடன் கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்திற்கு பேரணியாக வந்து தங்களது எதிர்ப்பினை வெளிப்படுத்தியிருந்தனர்.
கடந்த 2013ஆம் ஆண்டிலிருந்து ஒருங்கிணைந்த சேவையாக இயங்கி வரும் பேருந்து நேர அட்டவணையில், கிழக்கு மாகாண போக்குவரத்து அதிகார சபையினால் திடீரென அனுமதி வழங்கப்பட்ட மூன்று புதிய பேருந்துகளை சேவையில் இணைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தாம் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் போராட்டக்காரார்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, குறித்த புதிய பேரூந்துகளை சேவையில் இணைப்பதற்காக தமது சேவை நேரத்தினை சுருக்கி சுழற்சி முறையிலான நேர அட்டவனை மூலம் சேவையில் ஈடுபடுத்துவதற்கும் அதிகாரிகள் திட்டமிட்டிருப்பதால் தாம் பாதிக்கப்படுவதாகவும் தெரிவித்து தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம் இன்று திடீர் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
மேலும், குறித்த விடயம் தொடர்பாக சங்க பிரதிநிதிகள் கிழக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தமது குறைகளையும் விளக்கியிருந்தனர்.
பகிரவும்...