Main Menu

தகவல்களை மறைக்கும் அரசாங்கம் – குற்றஞ்சாட்டும் சுமந்திரன்

மதுபானசாலை அனுமதிப்பத்திரங்களைப் பெறுவதற்குச் சிபாரிசு செய்தவர்களின் தகவல்களை அரசாங்கம் தொடர்ந்தும் மறைத்து வருவதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் குற்றஞ்சாட்டியுள்ளார்.

வடமராட்சி ஊடக இல்லத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.