ட்ரம்பிற்கு ஜனாதிபதி நன்றி
தேவையான நேரத்தில் இலங்கையுடன் கைகோர்த்தமைக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட்
ட்ரம்ப்பிற்கு நன்றி தெரிவிப்பதாக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
அவர் தனது எக்ஸ் தளத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர்களின் போது அமெரிக்கா C-130 விமானத்தை அனுப்பி வைத்ததுடன்
அவசர உதவியாக 02 மில்லியன் டொலர்களை வழங்கியது.
