Main Menu

ஜப்பானில் வெள்ளம், நிலச்சரிவு – பல்லாயிரம் பேர் வீடுகளை விட்டு வெளியேற்றம்

ஜப்பானின் இஷிகாவா (Ishikawa) மாநிலத்தில் பல்லாயிரம் பேருக்கு வீடுகளைவிட்டு வெளியேறும்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.அங்கு வரலாறு காணாத அளவுக்கு மழை பெய்தது.பல இடங்களில் வெள்ளமும் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா (Fumio Kishida), பேரிடரைச் சமாளிக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அரசாங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.மக்களின் உயிரைக் காப்பதற்கு முன்னுரிமை அளிக்கும்படி அவர் வலியுறுத்தினார்.ஜப்பானிய வானிலை ஆய்வு நிலையம் இஷிகாவா மாநிலத்தின் பல வட்டாரங்களில் ஆக உயரிய அபாய எச்சரிக்கை நிலையை அறிவித்துள்ளது.பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிப்போர் அதிக விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.இஷிகாவா, யமகாட்டா (Yamagata), நிகாட்டா (Niigata) ஆகிய வட்டாரங்களின் சில பகுதிகளில் மண்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இஷிகாவாவில் மூன்று பேர் காணாமல்போனதாக நம்பப்படுகிறது.நோட்டோ பகுதியில் ஒருவர் மாண்டதாகத் தெரிவிக்கப்பட்டது.வஜிமா (Wajima), சுசூ (Suzu) நகரங்களில் ஏராளமான வீடுகள், சாலைகள், நிலப் பகுதிகள் முதலியவை முற்றிலும் நீருக்கடியில் இருக்கின்றன.இதற்கிடையே ஜப்பானின் மற்ற பகுதிகளிலும் இன்று கனமழை பெய்யும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.

பகிரவும்...
0Shares