ஜப்பானில் ஏற்பட்ட காட்டுத் தீயினால் 100 வீடுகள் எரிந்து நாசம் – 1200 பேர் வெளியேற்றம்

ஜப்பானின் ஒபுனாடோவில் கடந்த வாரம் பயங்கர காட்டுத்தீ ஏற்பட்டது.
இந்த காட்டுத்தீ அருகில் உள்ள நகரங்களுக்கும் வேகமாகப் பரவி வருகிறது.
இதனால் சுமார் 100 வீடுகள் காட்டுத்தீயில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதில் பல இலட்சம் பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது.
5 ஆயிரம் ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசமாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
1200 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.