ஜனாதிபதி அனுரவிற்கு உலகத் தமிழர் பேரவை வாழ்த்து

நாட்டின் 9ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனுரகுமார திசாநாயக்கவிற்கு உலகத் தமிழர் பேரவை (GTF) வாழ்த்து தெரிவித்துள்ளது. சிறுபான்மை மக்களின் நீண்டகால குறைகளை நிவர்த்தி செய்வதற்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க நடவடிக்கைகளை மேற்கொள்வார் என உலகத் தமிழர் பேரவை (GTF) நம்பிக்கை வெளியிட்டுள்ளது. தாழ்மையான தோற்றத்திலிருந்து தொடங்கி இன்று ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ள அனுரகுமார திஸாநாயக்கவின் சாதனை இளைஞர்கள் மத்தியில் புதிய உத்வேகத்தை அளிக்கும் எனவும் உலகத் தமிழர் பேரவை குறிப்பிட்டுள்ளது. அத்துடன் இலங்கையின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ள கலாநிதி ஹரிணி அமரசூரியவுக்கும் உலகத் தமிழர் பேரவை (GTF) வாழ்த்து தெரிவித்துள்ளது.
