Main Menu

ஜனாதிபதியைத் தாக்கியவரிற்கு 18 மாதச் சிறைத்தண்டனை

Tain l’Hermitage (Drôme) இல் பிரச்சாரத்திற்குச் சென்ற எமானுவல் மக்ரோன் கன்னத்தில் Damien Tarel என்பவர் அறைந்த சம்பவத்தின் அதிர்வுகள் இன்னமும் சர்வதேச ஊடகங்களில் கூட ஓயவில்லை.

குற்றவாளி  Damien Tarel நீதிமின்றத்தில் விசாரிக்கப்பட்டுத் தண்டணை வழங்கப்பட்டுள்ளது.

இவரிற்கு 18 மாதச் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதில் நான்கு மாதங்கள் சிறையிலும், மிகுதி 14 மாதங்கள் சட்டக் காவற் கண்காணிப்பிலும் கழிக்க வேண்டும்.

அதே நேரம் அதனைத் தொடர்ந்து இரண்டு வருடங்களிற்கு இவர் மீதான கண்காணிப்பு அவதானிக்கப்படும். அதற்குள் வேறு குற்றம் புரிந்தால் முழுமையான காலத்தையும் சிறையிலேயே கழிக்க நேரிடும்.

இந்த இரண்டு வருடகாலத்தில், கட்டாமாக வேலை செய்தல் அல்லது பயிற்சி வகுப்புகளில் இணைதல் ஆகிய ஓன்றைச் செய்வேண்டும். அதேநேரம் மேலும் குற்றங்களைச் செய்யாமல் இருக்க, உளவியல் சிகிச்சைகளையும் பெறவேண்டும் எனத் தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் தீர்ப்பின் பின்னர் உடனடியாக இவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

பகிரவும்...