Main Menu

ஜனாதிபதித் தேர்தல் ; யாழில் அமைதியான முறையில் வாக்களிப்பு ஆரம்பம்

இலங்கையின் 9 ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான ஜனாதிபதி தேர்தலானது இன்று சனிக்கிழமை (21) காலை 7 மணியளவில் நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகியது.அந்தவகையில் யாழ்ப்பாணத்தில் 492,280 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளதுடன், 511 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.இந்நிலையில், வட்டுக்கோட்டை தேர்தல் தொகுதியில், வள்ளியம்மை வித்தியசாலை, முருகமூர்த்தி வித்தியாசாலை, அராலி சரஸ்வதி கல்லூரி மற்றும் வட்டுக்கோட்டை இந்துக் கல்லூரி ஆகிய பாடசாலைகளில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் மக்கள் வாக்களித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது

பகிரவும்...
0Shares