Main Menu

செம்மணிக்கு நீதிகோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்

கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டம் ஒன்று நடைபெற்று வருகிறது.
செம்மணியில் இடம்பெற்ற படுகொலைகளுக்கு நீதிகோரி இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
நீதிக்கான மக்கள் சக்தி அமைப்பினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துக்கொண்டனர்.
தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை ஜனாதிபதி செயலகத்தில் ஒப்படைக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்தனர்.
அதற்கமைய, கோட்டை தொடருந்து நிலையத்துக்கு அருகிலிருந்து ஜனாதிபதி செயலகம் வரை பேரணியாக செல்வதற்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் முயற்சித்த போது, காவல்துறையினர் அதற்கான அனுமதியை வழங்கவில்லை.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களில் ஐவருக்கு மாத்திரம் ஜனாதிபதி செயலகத்திற்கு செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்ட போதிலும், ஆர்ப்பாட்டக்காரர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை.
பகிரவும்...
0Shares