Main Menu

Seine நதியில் நீச்சல்.. காலம் நீடிப்பு

சென் நதியில் நீந்துவதற்குரிய தடாகங்கள் அமைக்கப்பட்டுள்ளமை அறிந்ததே. அதன் காலப்பகுதியை நீடித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

செப்டம்பர் 7 ஆம் திகதி வரை திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த Grenelle தடாகம், செம்ப்டம்பர் 14 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும், செப்டம்பர் 7 ஆம் திகதியுடன் மூடப்படும் என அறிவிக்கப்பட்டிருந்த Bercy தடாகம், இரு வாரங்கள் பிற்போடப்பட்டு செப்டம்பர் 21 ஆம் திகதி வரை திறந்திருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, Bras Marie தடாகம் திட்டமிடப்பட்டது போல் இம்மாதம் 31 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையுடன் மூடப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

அண்மைய நாட்களில் நீச்சல் தடாகங்களுக்கு அதிகளவான மக்கள் வருகை தந்துகொண்டுள்ளனர். முதல் ஒரு மாதத்தில் 80,000 பேர் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

பகிரவும்...
0Shares