சென்னையில் இருந்து புறப்பட்ட ரெயில் மதுரையில் தடம்புரண்டு விபத்து
சென்னை சென்ட்ரல் இருந்து போடிக்கு சென்று கொண்டிருந்த ரெயில் மதுரை சந்திப்பில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் ரெயில் எஞ்சினுக்கு அடுத்த பெட்டியின் சக்கரம் கழன்று ரெயில் தடம்புரண்டு விபத்துக்குள்ளானது.
ரெயிலின் சக்கரம் கழன்றதால் பெட்டி தடம்புரண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், உடனடியாக ரெயில் நிறுத்தப்பட்டதாலும், பணிகளின் எண்ணிக்கை குறைவாகி இருந்ததாலும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
மதுரை ரெயில்வே சந்திப்பில் சக்கரம் கழன்று தடம்புரண்டு ரெயில் பெட்டியை சீரமைக்கும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.
பகிரவும்...