Main Menu

3ம் ஆண்டு சிரார்த்த திதி – சுவர்க்கலோக வாசகி அமரர்.ஶ்ரீ சிற்சபேச குருக்கள் இலட்சுமி அம்மா (01/05/2025)

இன்றைய தினத்தில் (01/05/2025) இந்தியாவை பிறப்பிடமாகவும் அராலியூரை புகுந்த இடமாகவும் கொண்ட ஶ்ரீ மதி சிற்சபேசகுருக்கள் இலட்சுமியம்மா அவர்களின் சிரார்த்த திதியை நினைவு கூருவோர் அன்பு மகன் சி.ரவிசந்திரன் (இலங்கை)அன்பு மகள் சசிகலா (பிரான்ஸ்) அன்பு மருமகன் சிவ ஶ்ரீ சிவ சுதக் குருக்கள் (காமாட்ஷி அம்மன் ஆலயம் பிரான்ஸ்) அன்பு பேரப்பிள்ளைகள் இராஜவர்மசர்மா,ஸைநிகா,நிஷாகர் (நோர்வே) சிபிவிஷ்டன் ஆகியோர்.
அத்துடன் இன்றைய தினத்தில் அம்மா அவர்களது 3 ம் ஆண்டு சிரார்த்த திதியில் அன்னாரது ஆன்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றார்கள்.

புன்னகை மின்னும் தோற்றம்
புனிதமான அன்பின் பார்வை
தன் அரும் திறமையினாலே- தனித்தே
சுமை தாங்கிய பேராற்றல்
மக்களின் கல்வி வளமே கண்ணாக கண்டு
வாழ்வில் வெற்றி கண்ட அன்புள்ளம்
இன்முகம் காட்டி ஈர்க்கும் தன்மை
அறு சுவை உண்டி வகை வகையாக
உபசரித்தே சலிக்காத உள்ளம்
கனிவுறும் அன்பை கொண்டே
கவர்ந்த அன்பின் உருவம்
இளமையில் தனித்தே நின்று
பொறுமை காத்த கருணை உள்ளம்
ஆண்டுகள் 3 ஆனாலும் மறக்க முடியவில்லை – எனிலும் ஆசிகளை வேண்டுவது மக்கள்,மருமக்கள்,பேரப்பிள்ளைகள்.

இன்று 3வது ஆண்டு திதியில் நினைவு கூரப்படும் அம்மா ஶ்ரீமதி சிற்சபேச குருக்கள் இலட்சுமியம்மாவை TRT தமிழ் ஒலி குடும்பமும் நினைவு கூருகின்றோம்.

இன்றைய TRT தமிழ் ஒலியின் அனைத்து நிகழ்ச்சிகளையும் வானலைக்கு எடுத்து வருகின்றார்கள் திரு.திருமதி.சிவசுதன் சர்மா, சசிகலா குடும்பத்தினர் மற்றும் பேரப்பிள்ளைகள்.

அவர்களுக்கும் எமது நன்றி

பகிரவும்...
0Shares