Main Menu

சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்து வருகின்றது- காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி

காணாமல் ஆக்கப்பட்ட விடயம் கூட கிடப்பிலே போடப்பட்டிருக்கின்றது நீதி கிடைக்கப் பெறாத சமூகமாக மக்களாக 350 க்கும் மேற்பட்ட தாய்மார்களின் பிள்ளைகளை தேடி இறந்தவர்களாக இருக்கின்றார்கள். இந்த சாட்சியங்கள் தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு கொண்டிருக்கின்றது.

இந்த நாட்டின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாளாகவே இருந்துவருகின்றது என,மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி, தெரிவித்தார்

இந்த நிலையில் அன்றைய தினம் அனைத்து தமிழர்களும் ஒன்று சேர்த்து எமது எதிர்ப்பினை தெரிவிக்கமுன்வரவேண்டும் என மட்டக்களப்பு மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்க தலைவி அமலராஜ் அமலநாயகி வேண்டுகோள் விடுத்தார்.

எதிர்வரும் இலங்கையின் சுதந்திர தினத்தினை கரிநாளாக அனுஸ்டிக்குமாறு விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கு அமைவாக இன்றைய தினம் இது தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பில் நடைபெற்றது.
யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கம் என்பன இணைந்து இந்த கூட்டத்தினை நடாத்தியது.

இந்த கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள சிவில்சமூக அமைப்புகள்,மனித உரிமை அமைப்புகள்,மத தலைவர்கள்,பல்கலைக்கழக மாணவர்கள்,ஊடகவியலாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது எதிர்வரும் 04ஆம் திகதி மட்டக்களப்பில் முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம் தொடர்பிலும் ஏற்பாடுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டதை தொடர்ந்து பல்கலைக்கழக மாணவர்கள்,வலிந்துகாணாமல்ஆக்கப்பட்டஉறவுகள் சங்கத்தினர் நடாத்திய ஊடகவியலாளர் சந்திப்பும் நடைபெற்றது.