பிரான்ஸ்: சுகாதார காப்புறுதி கட்டணங்கள் அதிகரிக்கிறது
2026 ஆம் ஆண்டில் காப்புறுதிகளுக்காக செலுத்தப்படும் கட்டணம் அதிகரிக்கப்பட உள்ளது. தனிநபர் காப்பீடு 4.3% சதவீதத்தில் இருந்து 4.7% சதவீதமாக அதிகரிக்கப்பட உள்ளது.
முந்தைய ஆண்டை விட இது குறிப்பிடத்தக்க அதிகரிப்பாகும். சர்வதேச அளவில் மருத்துவச்செலவை கருத்தில் கொண்டு இந்த அதிகரிப்பு இடம்பெற உள்ளதாக பிரெஞ்சு பரஸ்பர சங்கங்களின் தேசிய கூட்டமைப்பு ( Fédération nationale de la mutualité française ) அறிவித்துள்ளது.
2026 ஆம் ஆண்டு வரவுசெலவுத்திட்டத்தில் சுகாதார காப்பீடு நிறுவனங்கள் மீது அதிக வரி அறவிடப்பட உள்ளது. 1 பில்லியன் யூரோக்கள் இந்த காப்புறுதி நிறுவங்கள் சேமிக்க வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது. இதனாலேயே இந்த கட்டண்ங்கள் அதிகரிக்கப்பட உள்ளது.
பகிரவும்...