சிறிய சிவனொளிபாத மலையிலிருந்து கீழே தவறி விழுந்து வெளிநாட்டுப் பெண் காயம்

பதுளை – எல்ல சிறிய சிவனொளிபாதமலையிலிருந்து கீழே தவறி விழுந்து வெளிநாட்டுப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று புதன்கிழமை (19) இடம்பெற்றுள்ளது.
பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த 64 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு காயமடைந்துள்ளார்.
காயமடைந்த வெளிநாட்டுப் பெண் தெமோதரை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பகிரவும்...