சிரியாவின் மின்சார உற்பத்திக்கு கட்டார் உதவி

சிரியாவின் மின்சார உற்பத்திக்காக கட்டார் இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சிரியாவில் நிலவும் மின்சாரத் தட்டுப்பாடுகளை நிவர்த்தி செய்வதற்கு கட்டாரிலிருந்து நாளொன்றுக்கு 2 மில்லியன் க்யூபிக் மீட்டர் அளவிலான இயற்கை எரிவாயுவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கட்டார் கையெழுத்திட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
கட்டார் நாட்டிலிருந்து ஜோர்தான் நாட்டைக் கடந்து செல்லும் குழாய் வழியாக சிரியாவின் டெயிர் அலி மின் நிலையத்திற்கு வழங்கப்படும் இந்த இயற்கை எரிவாயுவின் மூலம் நாளொன்றுக்கு 400 மெகா வோட்ஸ் அளவிலான மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளது.
கடந்த 14 ஆண்டுகளாக சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி பஷார் அல்- அசாத்தின் அரசுக்கு எதிராக அந்நாட்டில் நடைபெற்ற உள்நாட்டு போரினாலும், மேற்கத்திய நாடுகள் விதித்த தடைகளினாலும் சிரியாவின் பொருளாதாரம் மற்றும் மின்சார உற்பத்தி உள்ளிட்ட உட்கட்டமைப்பு வளர்ச்சிகள் அனைத்தும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.