Main Menu

சிட்னியில் பாலஸ்தீன ஆதரவு பேராட்டம் – அவுஸ்திரேலியா ஏன் இதுவரை இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என கேள்வி?

அவுஸ்திரேலியாவில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பாலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்டத்தின் போது ஆயிரக்கணக்கானவர்கள் சிட்னி துறைமுகத்தின் பாலத்தின் ஊடாக பேரணியாக

அவுஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கிய நிலையிலேயே இந்த ஆர்ப்பாட்ட பேரணி இடம்பெற்றது. .இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்தவர்கள் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என வர்ணித்துள்ளனர்.

காசா யுத்தத்தை நிறுத்துமாறு அரசியல்வாதிகளை கோரும் செய்திகளுடன்  ஆயிரக்கணக்கானவர்கள் கொட்டும் மழையிலும் இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டனர்.

விக்கிலீக்ஸ் ஸ்தாபகர் ஜூலியன் அசஞ்சேயும் காணப்பட்டார்.

வெட்கம் வெட்கம் இஸ்ரேல் வெட்கம் வெட்கம் அமெரிக்கா என ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் கோசமிட்டனர்? எங்களிற்கு  என்ன வேண்டும் யுத்த நிறுத்தம் எப்போது வேண்டும தற்போது எனவும் அவர்கள் கோஷமிட்டனர்.

ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்துகொண்டவர்களிற்கு ஆதரவாக பல பெண்கள் தங்கள் குழந்தைகளுடன் பாலத்தின் இருபக்கத்திலும் திரண்டிருந்தனர்.

காசா உலகின் ஏனைய பக்கத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும் ஆனால் அது எங்களை இங்கு பெருமளவில் பாதிக்கின்றது என தெரிவித்த அலெக் பெவிலே என்ற தந்தையொருவர் காசாவின் சிறுவர்களை தனது மூன்று வயது மகனுடன் ஒப்பிட்டுள்ளதுடன் நாங்கள் உதவிகள் மூலம் மேலும் உதவுமோம் என தெரிவித்துள்ளார்.

எங்கள் அரசாங்கம் இஸ்ரேலிற்கு எதிராக தடைகளை விதிக்கவில்லை என தெரிவித்த ஜாரா வில்லியம் தனது குழந்தையுடன் காணப்பட்டார்.மக்களை முழுமையாக பலவந்தமாக பட்டினி போட்டுள்ள நிலையில் எங்களால் எதுவும் செய்ய முடியவில்லை என குறிப்பிட்டார்.

இரண்டு மணிநேரம் இடம்பெற்ற இந்த ஆர்ப்பாட்ட பேரணியில் 90,000க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டுள்ளனர் என பொலிஸார் மதிப்பிட்டுள்ளனர்.

பகிரவும்...
0Shares