Main Menu

சர்வதேச நாணய நிதியம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் மூலோபாயம் என்ன? – பொருளாதார பேரவையின் தலைவர் கருத்து

சர்வதேச நாணயநிதியத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டங்களிற்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் தேசிய மக்கள் சக்தி  அதனை தொடரும் எனினும் திட்டத்தின் நோக்கங்களை வேறுஅணுகுமுறையின் ஊடாக அடைவதற்கு முயலும் என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முன்னைய அரசாங்கங்களின் அனுகுமுறையிலிருந்து வேறுபட்ட அணுகுமுறையை பின்பற்றும் என அவர் தெரிவித்துள்ளார்.

பொருளாதார சுமைகளை நியாயமான விதத்தில் பகிர்ந்துகொள்ளும்,வலுவான நிதி ஒருங்கிணைப்பை உறுதி செய்யும் வருமான நடவடிக்கைகளை நாங்கள் சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அரசாங்கத்தின் அரசாங்கத்திற்கு சொந்தமான நிறுவனங்களை சீர்திருத்தும் நடவடிக்கைகள் தனியாருக்கு நன்மையளிக்கும் வகையில் காணப்பட்டன,ஆனால் புதிய அரசாங்கம் பொதுமக்களின் நலனை அடிப்படையாக வைத்து இவற்றை மறுசீரமைக்கும் என என தேசிய மக்கள் சக்தியின் பொருளாதார பேரவையின் தலைவர் பேராசிரியர் அனில் ஜயந்த தெரிவித்துள்ளார்.

எனினும் ஹோட்டல்கள் போன்றவற்றை விற்பனை செய்வதற்கு  தயார் எனஅவர் தெரிவித்துள்ளார்.

நாங்கள் கடன்மறுசீரமைப்பு உடன்படிக்கையில் தாமதமின்றி கைச்சாத்திட விரும்புகின்றோம் என அவர் தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares