சர்வதேச சந்தையில் எண்ணெய் விலைகள் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் வெள்ளிக்கிழமை (29) மசகு எண்ணெய் விலைகள் சரிந்தன.
உலகின் மிகப்பெரிய நுகர்வோரான அமெரிக்காவில் கோடைக்காலம் நெருங்கி வருவதால் தேவை குறையும் என்ற எதிர்பார்ப்புகளுக்கும், ரஷ்ய விநியோகம் கிடைப்பது குறித்த நிச்சயமற்ற தன்மைக்கும் இடையில் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
வெள்ளிக்கிழமை காலாவதியாகும் ஒக்டோபர் மாத விநியோகத்திற்கான பிரெண்ட் மசகு எண்ணெய் விலை 0641 GMT மணிநேரத்தில் 39 காசுகள் அல்லது 0.6 சதவீதம் குறைந்து 68.23 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
மேற்கு டெக்சாஸ் இடைநிலை (WTI) மசகு எண்ணெய் விலை 39 காசுகள் அல்லது 0.6 சதவீதம் குறைந்து 64.21 அமெரிக்க டொலர்களாக பதிவானது.
இந்த வார தொடக்கத்தில் ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி நிலையங்கள் மீதான உக்ரேன் தாக்குதல்கள், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்னுக்கும் உக்ரேன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கிக்கும் இடையில் எந்த சந்திப்பும் இருக்காது என்று ஜெர்மன் ஜனாதிபதி பிரீட்ரிக் மெர்ஸ் வியாழக்கிழமை (28) கூறியதைத் தொடர்ந்து எண்ணெய் விலைகள் உயர்ந்தன.
இருப்பினும், எதிர்வரும் திங்கட்கிழமை (செப்டெம்பர் 1) தொழிலாளர் தின விடுமுறையுடன் அமெரிக்க கோடைகால தேவை காலம் முடிவடைவதனாலும் மிகப்பெரிய நுகர்வோரான எண்ணெய் தேவை குறைந்துள்ளது.
வியாழக்கிழமை (28) அதிகாலை உக்ரேன் தலைநகர் கீவ் மீதான ரஷ்ய தாக்குதல்கள் 23 பேரைக் கொன்றன.
அமெரிக்கா கடுமையான தடைகளுடன் பதிலளிக்கக்கூடும் என்ற கவலையை எழுப்பியது.
இதனிடையே, புதன்கிழமை (27) ட்ரம்ப் இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் எண்ணெய் மீதான வரிகளை இரட்டிப்பாக்கி 50 சதவீதமாக உயர்த்தியதை அடுத்து, ரஷ்யாவின் எண்ணெய் வாங்குவதை நிறுத்துமாறு அமெரிக்கா விடுத்த அழுத்தத்திற்கு இந்தியாவின் பதிலை முதலீட்டாளர்கள் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இருப்பினும், அமெரிக்காவின் அழுத்தத்தை மீறி, செப்டம்பர் மாதத்தில் இந்தியாவுக்கான ரஷ்ய எண்ணெய் ஏற்றுமதி அதிகரிக்கும் என்று வர்த்தகர்கள் தெரிவித்தனர்.
உலகின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதியாளரான சவுதி அரேபியா, போதுமான விநியோகம் மற்றும் பலவீனமான தேவை காரணமாக, ஆசிய வாங்குபவர்களுக்கு ஒக்டோபர் மாத மசகு எண்ணெய் விலையைக் குறைக்கக்கூடும் என்று சுத்திகரிப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.
அதேநேரம், கடந்த வாரம் ரஷ்யாவில் உக்ரேனிய தாக்குதலால் ஏற்பட்ட செயலிழப்பிற்குப் பின்னர், ட்ருஷ்பா குழாய் வழியாக ஹங்கேரி மற்றும் ஸ்லோவாக்கியாவிற்கு ரஷ்ய மசகு எண்ணெய் விநியோகம் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக ஹங்கேரிய எண்ணெய் நிறுவனமான MOL மற்றும் ஸ்லோவாக்கியாவின் பொருளாதார அமைச்சர் வியாழக்கிழமை தெரிவித்தமையும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...