சபாநாயகர் பதவிக்கு நிஹால் கலப்பத்தி?

2024 நாடாளுமன்றத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மையைப் பெற்றுள்ளது.
இதன்படி, புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை இன்று (18) முற்பகல் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டது.
ஜனாதிபதியின் கீழ் 3 அமைச்சுகளும், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் கீழ் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு உட்பட 21 அமைச்சர்களும் நியமிக்கப்பட்டனர்.
எவ்வாறாயினும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலிருந்து நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள நிஹால் கலப்பத்தியை புதிய நாடாளுமன்ற சபாநாயகராக நியமிக்கத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
1994ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்று நிஹால் கலப்பத்தி நாடாளுமன்றம் பிரவேசித்தார்.
இம்முறை நாடாளுமன்றத் தேர்தலில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் நிஹால் கலப்பத்தி 125,983 வாக்குகளைப் பெற்று அந்த மாவட்டத்திலிருந்து அதிகூடிய வாக்குகளைப் பெற்ற வேட்பாளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...