Main Menu

சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை!- ஜனாதிபதி

எத்தகைய எதிர்ப்புக்கள் முன்வைக்கப்பட்டாலும் சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற எமது கொள்கையில் இருந்து ஒருபோதும் பின்வாங்க போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்

அலரி மாளிகையில் இன்று பிற்பகல் இடம்பெற்ற தேசிய பிக்குகள் மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே  ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார்.

இது குறித்து ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளதாவது”  அனைவரும் சட்டத்தின் சமமே என்ற கலசாரம் தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் உருவாக்கப்படும். செல்வம் அதிகாரம் பதவி இவை எதுவும் அதற்கு விதிவிலக்கல்ல.  சட்டத்தின் முன்பு அனைவரும் சமமே.  எமது நாட்டில் என்றோ ஒருநாள் குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்தாலும். ஊழல் மோசடியில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டவர்களாக இருந்தாலும் அல்லது பொதுமக்களின் சொத்தினை வீணடித்திருந்தாலும் அவர்கள் அனைவரும் சட்டத்தின் முன்னிறுத்தப்படுவார்கள்.

அதற்கான அதிகபட்ச நடவடிக்கை எடுக்கப்படும். அதுபழிவாங்கல் அல்ல. தண்டிக்கப்படுவதுமல்ல. நீதித்துறை தொடர்பிலான நம்பிக்கை உறுதிப்படுத்தப்பட வேண்டும். இன்று நாட்டில் பொதுவெளியில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை தொடர்பாக நம்பக்கையற்ற நிலை காணப்படுகிறது. அனைவரும் ஒரே சட்டம் என்ற அடிப்படையில் நாம் நடவடிக்கை எடுப்போம். எமது இந்த தீர்மானத்தில் இருந்து நாம் ஒருபோதும் பின்வாங்க மாட்டோம். அரசியல்வாதிகள் தங்களின் அதிகாரபலத்தின் ஊடாக மக்களின் சொத்துக்களை வீணடிப்பதற்கு இடமளிக்க மாட்டோம் என்பதை நாம் நிரூபித்துள்ளோம்” இவ்வாறு ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பகிரவும்...
0Shares