Main Menu

கைதான மனுஷ நாணயக்காரவிற்கு பிணை

இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்பிய போது முறைகேடு இடம்பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டு தொடர்பாக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது இஸ்ரேலில் வேலைவாய்ப்பிற்காக ஊழியர்களை அனுப்புவதில் நடந்த முறைகேடு தொடர்பாக வாக்குமூலம் அளிக்க இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவில் இன்று (15) காலை ஆஜரானபோது அவர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் அவர் கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

பகிரவும்...
0Shares