கெஹெல்பத்தர பத்மே குறித்த முக்கிய தகவலை வெளியிட்ட குற்றப் புலனாய்வுத் திணைக்களம்

இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தர பத்மே நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளில் பிரதான குற்றவாளி என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது
இந்தோனேஷியாவில் கைது செய்யப்பட்டு நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட கெஹெல்பத்தரே பத்மே நீதிமன்ற உத்தரவிற்கமைய 90 நாட்கள் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
அந்த வகையில் தற்போது குற்றப்புலனாய்வு துறையினரால் தடுப்புக்காவலில் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட குற்றக்குழுவைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணையின் ரகசிய அறிக்கை ஒன்று கொழும்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது
குறித்த அறிக்கை கொழும்பு மேலதிக நீதவான லஹிரு சில்வா முன்னிலையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தினரால் நேற்று நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
ஆயுதங்கள் வெடிபொருட்கள் சேகரித்தமை திட்டமிடப்பட்ட குற்றக்குழு வலையமைப்புடன் தொடர்புடைய பல தகவல்கள் வெளியிடப்பட்டிருந்ததாகவும் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் நீதிமன்றுக்கு அறிவித்திருந்தனர்.
சட்டம் மற்றும் ஒழுங்கை பேணும் உயர்பொலிஸ் அதிகாரிகள் மற்றும் உயர்மட்ட அரச அதிகாரிகளுக்கு அச்சுறுத்தல் விடுத்தமை போன்ற செயல்களிலும் தொடர்புபட்டுள்ளதாக குறிப்பிட்டனர்.
கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் கெஹெல்பத்தர பத்மே தொடர்புபட்டுள்ளாரா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுவருவதாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள நீதிமன்றுக்கு அறிவித்தனர்.
இதேவேளை கெஹெல்பத்தர பத்மே இந்த நாட்டில் திட்டமிடப்பட்ட குற்றச்செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்செயற்பாடுகளின் பிரதான நபர் என்பது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்துள்ளது.
மேலும் இந்த விசாரணை அறிக்கை தவிர்ந்த ரகசியதகவல்கள் அடங்கிய அறிக்கை ஒன்று நேற்று நீதிமன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்டதுடன் அந்த அறிக்கையில் உள்ள தகவல்கள் தேசிய பாதுகாப்புடன் தொடர்புடையவை என்பதனால் அதனை நீதிமன்ற பாதுகாப்பில் வைக்குமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கோரிக்கை விடுத்தனர்
இதனையடுத்து குறித்த அறிக்கையினை பாதுகாப்பாக வைக்குமாறு நீதவான்உத்தரவிட்டிருந்ததுடன் விசாரணை அறிக்கையின் முன்னேற்றம் தொடர்பான காரணிகளை அடுத்தவாரம் நீதிமன்றில் முன்வைக்குமாறும் உத்தரவிட்டார்.
பகிரவும்...