Main Menu

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் இருந்து வெளியேறினார் நாமல்

பாராளுமன்ற உறுப்பினர்  நாமல் ராஜபக்ஷ வாக்குமூலம் வழங்கிய பின்னர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

நிதி மோசடி வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட டெய்சி பொரெஸ்ட் பாட்டி தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக நாமல் ராஜபக்ஷ குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் திங்கட்கிழமை (07) காலை ஆஜராகியிருந்தார்.

இதன்போது, நாமல் ராஜபக்ஷவிடமிருந்து வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், நாமல் ராஜபக்ஷ குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் இருந்து வெளியேறியுள்ளார்.

பகிரவும்...