குரங்குகளின் அதிகரிப்பிற்கு மனிதர்களின் செயற்பாடே காரணம் – சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க
நாட்டில் மனிதர்களால் அதிகளவான உணவுகள் சூழலுக்கு விடுவிக்கப்படுகின்றமை குரங்குகளின் எண்ணிக்கை அதிகரிப்பில் தாக்கம் செலுத்தியுள்ளதாக சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
ஆங்கில ஊடகமொன்றுக்கு இது தொடர்பில் கருத்துரைத்த அவர், பாரியளவில் உணவு விரயமாவதால் குரங்குகளின் தொல்லை ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.
உணவுக் கழிவுகள் தொடர்ந்தும் அதிகளவில் விடுவிக்கப்படும் உணவகங்கள், முக்கிய சுற்றுலாத் தலங்கள் மற்றும் பொது இடங்களுக்கு அருகில் குரங்குகளின் நடமாட்டம் அதிகரித்து வருகின்றது.
குரங்குகள் புத்திசாலித்தனமான உயிரினம் என்பதுடன் சூழலுக்கு ஏற்றவகையில் விரைவில் தங்களை மாற்றியமைக்கும் திறன் கொண்டவையாகும்.
குரங்குகளின் எண்ணிக்கையை ஒழுங்குபடுத்துவதில் இயற்கையான உணவு சமநிலை முக்கிய பங்கு வகிக்கின்றது.
காடுகளில் கிடைக்கப்பெறும் உணவுகளுக்கு அமைய இனப்பெருக்க சுழற்சி இடம்பெறுகின்றது.
எனினும் நகர்ப்புற பகுதிகளில் குரங்குகளுக்குக் கிடைக்கப் பெரும் உணவுகளுக்கு அமைய, இனப்பெருக்க அதிர்வெண் அதிகரிப்பதாகவும் சூழலியல் நிபுணர் மெண்டிஸ் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
