Main Menu

கிளிநொச்சியில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் மீட்பு

கிளிநொச்சி – புளியம்பொக்கனை பகுதியில் அடையாளம் தெரியாத இருவரின் சடலங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் உள்ள வடிகால் ஒன்றிலிருந்து இவ்வாறு இரண்டு ஆண்களின் சடலங்கள் இன்றையதினம் (02) கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளைக் கிளிநொச்சி காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர்.

இதேவேளை, புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலிருந்து அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மருதானை காவல்துறையினர் முன்னெடுத்து வருகின்றனர்.

பகிரவும்...
0Shares