காவல் துறையினரின் தாக்குதலுக்கு உள்ளான யாழ் இளைஞன் – விசாரணைகள் ஆரம்பம்

நெல்லியடி – மந்துவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த இளைஞர், தம்மைக் கைது செய்து அழைத்துச் சென்று காவல்துறையினர் கடுமையாகத் தாக்கியதாகத் தெரிவித்திருந்தார்.
இதன்போது தமது கை முறிந்ததாகவும் குறித்த இளைஞர் ஊடகங்களுக்குக் குறிப்பிட்டிருந்தார்.
நெல்லியடி பகுதியில் தொலைபேசி தந்திகள் அறுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி அவர் கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தநிலையில் தம்மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவித்துள்ள அவர் யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடளித்திருந்தார்.
பகிரவும்...