Main Menu

களை கட்டியது தீபாவளி வியாபாரம்

தீபாவளி திருநாளை முன்னிட்டு வவுனியாவில் வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், நகரில் அதிக சனநெரிசல்களையும் அவதானிக்க முடிகிறது.

நாளை திங்கட்கிழமை (20) உலகம் பூராவும் உள்ள இந்து மக்களினால் தீபாவளி திருநாள் கொண்டாடப்படவுள்ள நிலையில் அதனை கொணடாடும் முகமாக வவுனியா நகரிற்கு அதிகளவிலான மக்கள் வருகை தந்து புத்தாடைகள், வெடிகள், இனிப்பு பண்டங்களை கொள்வனவு செய்ததை அவதானிக்க முடிந்தது.

கடந்த வருடத்தை விட இம் முறை தீபாவளி வியாபாரம் களை கட்டியுள்ளதுடன், மக்கள் தீபாவளி கொண்டாட்டத்திற்கு ஆர்வத்துடன் தயாராகி வருவதையும் அவதானிக்க முடிந்தது.

பகிரவும்...
0Shares