Main Menu

கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தால் ஓய்வூதியத்தை இழந்த 85 நாடாளுமன்ற உறுப்பினர்கள்

நாடாளுமன்ற காலம் நிறைவடைவதற்கு முன்னர் ஜனாதிபதியினால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமையினால் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 85 பேருக்கு ஓய்வூதியக் கொடுப்பனவு இல்லாமல் போயுள்ளது.
1977ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நாடாளுமன்ற உறுப்பினர் ஓய்வூதியக் கொடுப்பனவு சட்டத்துக்கு அமைய, நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் ஓய்வூதியக் கொடுப்பனவைப் பெற வேண்டுமாயின் நாடாளுமன்ற உறுப்பினராக 5 வருடங்கள் செயற்பட்டிருக்க வேண்டும்.
அதேநேரம் 9ஆவது நாடாளுமன்றம் உத்தியோகப்பூர்வமாக எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 8ஆம் திகதி காலாவதியாகும். எனினும் அதற்கு முன்னதாக நாடாளுமன்றம் ஜனாதிபதியினால் கலைக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில் ஆளும் தரப்பின் உறுப்பினர்கள் உட்பட 85 முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஓய்வூதியம் இல்லாமல் போயுள்ளது.
அதேநேரம், 5 ஆண்டுகள் நிறைவடைந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு அவர் பெறும் வேதனத்தில் மூன்றில் ஒரு பங்கு ஓய்வூதியமாக வழங்கப்படும்.
இதன்படி 5 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்ட ஒருவருக்கு 21,000 ஓய்வூதியமாகச் செலுத்தப்படும்.
அதேநேரம் 10 ஆண்டுகள் செயற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு மூன்றில் இரண்டு பங்கு ஓய்வூதியமாகச் செலுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
பகிரவும்...
0Shares