Main Menu

கன மழையினால் வெள்ளத்தில் மூழ்கிய நுவரெலியா

நாட்டில் பெய்துவரும் பலத்த மழையினால் பல்வேறு பகுதிகள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதுடன், நுவரெலியாவிலும் அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
கடும் மழை காரணமாக இன்று (27) பிற்பகல் நுவரெலியா மாவட்டத்தின் விக்டோரியா பூங்கா, தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவு உட்படப் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
தீயணைப்பு பிரிவு வெள்ளத்தில் மூழ்கியதையடுத்து, குறித்த இடத்திலிருந்து தீயணைப்பு வாகனங்களை அகற்றுவதற்கு நகர சபையின் கட்டுப்பாட்டு அதிகார சபை நடவடிக்கை எடுத்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது.
அதன் அருகில் உள்ள பல கடைகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதுடன், விக்டோரியா பூங்காவில் உள்ள சிறுவர் பூங்காவும் முற்றாக நீரில் மூழ்கியுள்ளது.
தலகெல ஓயா நிரம்பி வழிவதால் நுவரெலியா மாநகர சபையின் பிரிவிற்குட்பட்ட பல இடங்கள் வெள்ள நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
பகிரவும்...
0Shares