Main Menu

கனடாவில் 4 குழுக்கள் தீவிரவாதப் பட்டியலில் சேர்ப்பு: சொத்துகள் முடக்கம்

கனடாவில் இணையத்தின் மூலம் இளைஞர்கள் தீவிரவாதத்தில் ஈர்க்கப்படுவதைத் தடுக்க, குற்றவியல் சட்டத்தின் கீழ் 764, மேனியாக் மர்டர் கல்ட் (Maniac Murder Cult),  Terrorgram Collective (டெரர்கிராம்) மற்றும் Islamic State–Mozambique (மொசாம்பிக்)  ஆகிய நான்கு புதிய அமைப்புகள் தீவிரவாத அமைப்புகள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.

பொது பாதுகாப்புத் துறை அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்த நடவடிக்கை மூலம், இந்த அமைப்புகளின் சொத்துகள் அனைத்தும் முடக்கப்பட்டு, அவற்றிற்கு நிதி அல்லது சேவைகள் வழங்குவது குற்றமாகிறது.

குறிப்பாக, 764, Maniac Murder Cult, மற்றும் Terrorgram Collective ஆகியவை எல்லை தாண்டிய, வன்முறையைத் தூண்டும் வலையமைப்புகள் ஆகும். இவற்றில் 764 அமைப்பைத் தீவிரவாதப் பட்டியலில் சேர்த்த முதல் நாடு கனடா என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நடவடிக்கையானது கனடிய பாதுகாப்பு மற்றும் சட்ட அமலாக்க அமைப்புகளுக்கு தீவிரவாத நடவடிக்கைகளைத் தடுக்க வலுவான கருவிகளை வழங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...