Main Menu

கண்டியில் பதற்றநிலை வெடிகுண்டு அச்சுறுத்தல்

வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக கண்டி மாவட்ட செயலகத்தில் விசேட சோதனை நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் (STF) வரவழைக்கப்பட்டு இந்தச் சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகிறது.

மின்னஞ்சல் ஊடாக கண்டி மாவட்ட செயலகத்தில் குண்டு வைக்கப்பட்டிருப்பதாக அநாமதேய தகவல் ஒன்று கிடைத்துள்ளமையை அடுத்தே இவ்வாறு தேடுதல் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பகிரவும்...