Main Menu

கட்டுநாயக்கவில் துப்பாக்கிச் சூடு ; ஒருவர் படுகாயம்

கட்டுநாயக்க 18 ஆவது மைல்கல் பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் 43 வயதுடைய நபரொருவர் படுகாயமடைந்துள்ள நிலையில் சிகிச்சைக்காக நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...