Main Menu

ஓமந்தை காணி விவகாரம்: அரசாங்கத்தின் அறிவிப்பு

வவுனியா, ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை நிறுத்தப்பட்டுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஓமந்தை பொலிஸார் அத்துமீறி சென்று துப்புரவு செய்து அதில் விகாரை அமைக்க மேற்கொண்ட முயற்சி அப்பகுதி மக்களால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவ்விடயம் தொடர்பாக பிரதேச சபை தீர்மானம் எடுக்கப்பட்ட பிறகும் வவுனியா ஓமந்தை பகுதியில் பொலிஸார் தனியார் காணிகளை அடாவடித்தனமாகக்  கைப்பற்றி வைத்திருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதனையடுத்து குறித்த விடயம் தொடர்பாகக் கருத்துத் தெரிவித்த பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால ” வவுனியா ஓமந்தை பொலிஸ் நிலையம் அருகில் உள்ள காணியை பொலிஸார் துப்புரவு செய்யும் வேலை உடனடியாக நிறுத்தப்பட்டுள்ளது. பொலிஸ்மா அதிபருடன் நான் பேசி அதற்கான உத்தரவை வழங்கியுள்ளேன். அந்த வேலை இனி இடம்பெறாது” எனத் தெரிவித்துள்ளார்.

 

பகிரவும்...
0Shares