Main Menu

ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்ட ஓய்வு பெற்ற ஆசிரியை உட்பட இருவர் கைது

கம்பளை உலப்பனை பிரதேசத்தில் வீடு ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில் ஒய்வு பெற்ற ஆசிரியர் ஒருவரும் அவரது மருமகன் ஜஸ் மற்றும் ஹொரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கம்பளை பொலிஸாருக்கு கிடைத்த ரகசிய தகவலை அடுத்து கம்பளை உலப்பனை பிரதேசத்தில் உள்ள வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டுவரும் மாமியார், மருகன் ஆகிய இருவர் 200 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் கம்பளை குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதேவேளை, அவர்களிடம் இருந்து இரண்டு தொலைபேசிகளும் மீட்கப்பட்டுள்ளதுடன் குறித்த மருமகன் முச்சக்கரவண்டி சாரதியாக உள்ள நிலையில் இவர்கள் கம்பளை, நாவலப்பிட்டி உலப்பனை போன்ற பகுதியில் இந்த சூட்சமான முறையில் போதைப்பொருள் வியாபாரம் செய்து வந்துள்ளனர்.

67 வயதுடைய ஒய்வு பெற்ற ஆசிரியை பல பாடசாலைகளில் கல்வி நடவடிக்கைகளில் முன்னேடுத்து வந்த நிலையில் தற்போது ஒய்வு பெற்றியிருந்த சந்தரப்பத்தில் மருமகனுடன் இணைந்து ஐஸ் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்துள்ளார்.

இதேவேளை, கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தின் ஆஜர் படுத்தப்பட்ட நிலையில் எதிர்வரும் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலதிக விசாரணை கம்பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

பகிரவும்...
0Shares